
மதுராந்தகம், தாராபுரம் மற்றும் புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல்களில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.
இதன்படி மதுராந்தகத்தில் கோ.ஜானகிராமன், தாராபுரத்தில் மு.கார்த்திகா மற்றும் தட்டாஞ்சாவடியில் ச.கார்த்திக் குமாரி ஆகியோர் களமிறக்கப்பட்டுள்ளதாக அவர் எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் காலியாக உள்ள 7 தொகுதிகளில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.