
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியிலுள்ள பசும்பொன்னில் விடுதலைப் போராட்ட வீரர் முத்துராமலிங்கத் தேவரின் 119-வது பிறந்தநாள் மற்றும் 64-வது குருபூஜை நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், ஆளுநர் அர்லேகர், மு.க.ஸ்டாலின் மற்றும் பழனிசாமி உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் தேவர் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
விழாவை முன்னிட்டு பல்வேறு அரசுத் துறைகள் சார்பில் 194 பயனாளிகளுக்கு ரூ.79.70 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டதோடு, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.