ஆரக்கிள் நிறுவனம் மீண்டும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதால், இந்தியாவில் சுமார் 3,000 ஊழியர்கள் வேலை இழந்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு காலை நேரத்தில் பணிநீக்க மின்னஞ்சல்கள் அனுப்பப்பட்டு, அன்றைய நாடே அவர்களின் கடைசி வேலை நாளாக அறிவிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த திடீர் பணிநீக்க நடவடிக்கை மற்றும் அது தொடர்பான விதிகள் குறித்து ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.