
சென்னையில் அதிவேகமாக பைக் ஓட்டி விபத்துக்குள்ளான இளைஞர் குகன் உயிரிழந்தார். இது தொடர்பாக 16 பேர் கைது செய்யப்பட்டு, 11 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
நள்ளிரவில் இளைஞர்கள் வாகனப் பந்தயம் மற்றும் சாகசங்களில் ஈடுபடுவது அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. சட்டவிரோதமாக சைலென்சர்களை அகற்றி வாகனங்களை இயக்குகின்றனர்.
பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சாகசங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.