
சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டு கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.10.50 உயர்த்தப்பட்டு, தற்போது ரூ.2,916.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வீட்டு உபயோகத்திற்கான 14.2 கிலோ சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை, அது தொடர்ந்து ரூ.957.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் இந்த விலை மறுஆய்வு செய்யப்படுகிறது.