
சவுதி அரேபியாவின் ரியாத் விமான நிலையம் மற்றும் அராம்கோ எண்ணெய் நிறுவனத்தின் கிடங்குகள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஒரே நாளில் 6 முறை தாக்குதல் நடத்தினர்.
ஏமனில் சவுதி நடத்திய வான்வெளி தாக்குதலில் சிறுவர்கள் உட்பட 27 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்த ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக ஹவுதி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு தரப்புக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்து வருவதால் அப்பகுதியில் பதற்றம் அதிகரித்துள்ளது.