
மத்திய டெக்சாஸில் புதன்கிழமை மதியம் 1:30 மணிக்கு மேல் நிகழ்ந்த அபாச்சி ஏ.எச். 64 ரக ஹெலிகாப்டர் விபத்தில் அதில் பயணித்த 2 வீரர்கள் உயிரிழந்தனர்.
ஃபோர்ட் ஹூட் தளத்தை மையமாகக் கொண்ட இந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதால் ஏற்பட்ட காட்டுத்தீயை அணைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.
விபத்துக்கான காரணம் குறித்து ஃபோர்ட் ஹூட்டின் குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை நடத்தி வருவதாக பெல் கவுண்டி ஷெரிஃப் அலுவலக செய்தித் தொடர்பாளர் கிளிஃப் கோல்மன் தெரிவித்தார்.