
சீன எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான சியோமியின் ரெட்மி நிறுவனம் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரெட்மி 17சி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
இந்த போன் 6.9 இன்ச் எல்சிடி டிஸ்பிளே, மீடியாடெக் டிமென்சிட்டி 6300 சிப்செட், 6,000mAh பேட்டரி மற்றும் 33 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட் கொண்டுள்ளது.
மூன்று வண்ணங்களில் கிடைக்கும் இந்த புதிய ஸ்மார்ட்போனின் விற்பனை வரும் 7-ம் தேதி தொடங்க உள்ள நிலையில், இதன் ஆரம்ப விலை ரூ.20,999 ஆகும்.