
ஜெர்மனியைச் சேர்ந்த போக்ஸ்வேகன் நிறுவனம் தனது மறுசீரமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக உலக அளவில் அதிகபட்சமாக 1.40 லட்சம் பணியிடங்களை குறைக்கத் திட்டமிட்டுள்ளது.
சீன நிறுவனங்களின் கடும் போட்டியால் நிறுவனத்தின் செலவு 30 சதவீதம் உயர்ந்துள்ள நிலையில், 1.11 லட்சம் கோடி ரூபாய் செலவை குறைக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
ஜெர்மனியில் நான்கு தொழிற்சாலைகளை மூடுவதன் மூலம் 40,000 பணியிடங்களும், ஒட்டுமொத்தமாக ஐரோப்பிய உற்பத்தி திறனை ஆண்டுக்கு 5 லட்சம் வாகனங்கள் குறைக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.