
தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் 97 புதிய திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதலமைச்சர் விஜய் முன்னிலையில் இன்று கையெழுத்தாகின்றன.
இந்த முதலீடுகள் மூலம் ரூ.67,452 கோடி மூலதனம் ஈர்க்கப்படுவதோடு, 1,06,998 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட உள்ளன.
ஹிந்துஜா குழுமம் ரூ.2,500 கோடி, டெய்ம்லர் ரூ.4,000 கோடி மற்றும் அல்ட்ராவயோலெட் நிறுவனம் ரூ.779 கோடி முதலீடு செய்து கிருஷ்ணகிரியில் மின்சார வாகன ஆலை அமைக்கின்றன.