
தனியார் எரிபொருள் நிறுவனமான நயாரா பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தியுள்ள நிலையில், இந்த விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதால் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 5-ம், டீசல் லிட்டருக்கு ரூ. 3-ம் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் நயாரா நிறுவனத்திற்கு சொந்தமாக 7,108-க்கும் மேற்பட்ட பெட்ரோல் நிலையங்கள் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.