
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை மாலை சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,19,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த 4 நாட்களில் ரூ.3,040 குறைந்திருந்த தங்கத்தின் விலை, ஒரே நாளில் கிராமுக்கு ரூ.150 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,890-ஆக அதிகரித்துள்ளது.
வெள்ளி விலையும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.265-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.5,000 உயர்ந்து ரூ.2,65,000-க்கும் விற்பனையாகிறது.