
தமிழகத்தில் பைக் டாக்ஸி சேவைகளை ஒழுங்குபடுத்துவதற்கான விதிகள் இல்லாததால், இது குறித்து கொள்கை முடிவு எடுக்க உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.
பைக் டாக்ஸிக்கு அனுமதி வழங்குவது குறித்து குழு அமைத்து முடிவு எடுக்கப்படும் வரை, விதிகளை மீறுபவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்துத் துறை செயலாளர் இது குறித்து விரிவான பதில் மனுவைத் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் கார்த்திகேயன் மற்றும் சக்திவேல் அமர்வு அறிவுறுத்தியுள்ளது.