Indian Politics
முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி கோரி விவசாயிகள் மறியல் போராட்டம்

முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி கோரி விவசாயிகள் மறியல் போராட்டம்

Dinamalar2h
THE BRIEF
1

கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மடத்துக்குளத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ரோடு மறியல் போராட்டம் நடந்தது.

2

நெல்லுக்கு ஒரு குவிண்டாலுக்கு ரூ.4,000, தேங்காய் ஒரு டன் ரூ.75,000, மக்காச்சோளம் ஒரு குவிண்டாலுக்கு ரூ.3,500, கரும்பு ஒரு டன் ரூ.6,000 மற்றும் பால் கொள்முதல் விலை லிட்டர் ரூ.60 ஆக நிர்ணயிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

3

போராட்டத்தில் ஈடுபட்ட 150-க்கும் மேற்பட்ட விவசாயிகளை மடத்துக்குளம் போலீசார் கைது செய்து தனியார் மண்டபத்தில் சிறைவைத்தனர்.