
மத்திய கிழக்கில் நிலவும் போருக்கு மத்தியில் ஏமனின் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி அமைப்பினர் சவுதி அரேபியாவின் ஆபா விமான நிலையம் மற்றும் அராம்கோ நிறுவனம் மீது தாக்குதல் நடத்தினர்.
ஹவுதிகள் மீது நேரடியாக ராணுவத் தாக்குதல் நடத்தக் கோரிய சவுதி இளவரசர் முகமது பின் சல்மானின் கோரிக்கையை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நிராகரித்தார்.
நேரடி ராணுவ நடவடிக்கை இல்லை என்றாலும், ஹவுதிகளின் நகர்வுகள் மற்றும் இலக்குகள் குறித்த உளவுத் தகவல்களை சவுதிக்கு வழங்க அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது.