
மகாராஷ்டிராவைச் சேர்ந்த 47 வயது ரமாபாய் ரன்வீர், தனது மகள்களின் கல்விச் செலவுக்காக சேலை அணிந்து வெறும் காலில் மாரத்தான் ஓடி முதலிடம் பிடித்துள்ளார்.
இந்த மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் கிடைத்த 3 ஆயிரம் ரூபாய் பரிசை, தனது மகளின் புத்தகங்கள் வாங்கப் பயன்படுத்தப்போவதாக அவர் தெரிவித்தார்.
அவரது மகள் பூஜாவும் அதே போட்டியில் பங்கேற்று இரண்டாவது இடம் பிடித்த நிலையில், கல்வி மைய இயக்குனர் பூஜாவின் பயிற்சிச் செலவை ஏற்பதாக அறிவித்துள்ளார்.