International
சவுதியில் மரண தண்டனை எதிர்கொள்ளும் இலங்கையை சேர்ந்த அனோஜன் சிவராசாவை மீட்கக் கோரிக்கை

சவுதியில் மரண தண்டனை எதிர்கொள்ளும் இலங்கையை சேர்ந்த அனோஜன் சிவராசாவை மீட்கக் கோரிக்கை

Hindu Tamil Thisai1h
THE BRIEF
1

சவுதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ள இலங்கையைச் சேர்ந்த 24 வயது தமிழரான அனோஜன் சிவராசாவை மீட்கக் கோரி வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக பாஜக இளைஞர் அணி தலைவர் எஸ்.ஜி.சூர்யா கடிதம் எழுதியுள்ளார்.

2

அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்கான காலக்கெடு வரும் 17-ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், செப்.28-க்குப் பிறகு அவரைத் தொடர்புகொள்ள இயலவில்லை என்றும் சிறையில் அவர் தாக்குதலுக்கு ஆளானதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

3

இலங்கை கோயிலில் நாய் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பான சமூக வலைதள விவாதத்தில் தமிழில் பதிவிட்டு நீக்கிய அனோஜன் சிவராசா, அரபு மொழியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு சவுதி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்ட புகாரால் ஜூலை மாதம் கைது செய்யப்பட்டார்.