
இந்திய பங்குச் சந்தை வரலாற்றிலேயே மிகப்பெரிய இரண்டாம் நிலை பங்கு விற்பனையான எல்.ஐ.சி நிறுவனத்தின் ஓ.எஃப்.எஸ் (OFS) மூலம் மத்திய அரசு ரூ.31,552 கோடி நிதி திரட்டியுள்ளது.
ஆரம்பத்தில் 2.5 சதவீத பங்குகளுடன் தொடங்கப்பட்ட இந்த விற்பனை, முதலீட்டாளர்களின் அமோக வரவேற்பால் 6.5 சதவீத பங்குகளாக உயர்த்தப்பட்டு வெற்றிகரமாக நிறைவடைந்தது.
இந்த விற்பனை மூலம் எல்.ஐ.சி நிறுவனத்தின் பொதுப் பங்குதாரர் பங்கு விகிதம் 10 சதவீதமாக உயர்ந்துள்ளதால், செபி நிர்ணயித்த 2027 மே மாத காலக்கெடுவை நிறுவனம் முன்கூட்டியே பூர்த்தி செய்துள்ளது.