தொழிலதிபர் மானவ் சர்தானா, குருகிராமில் உள்ள 'தி டாலியாஸ்' திட்டத்தில் 17,200 சதுர அடி பரப்பளவு கொண்ட பென்ட்ஹவுஸை ரூ.271 கோடிக்கு வாங்கியுள்ளார்.
கார்பெட் ஏரியாவின் அடிப்படையில் ஒரு சதுர அடிக்கு சுமார் ரூ.2.6 லட்சம் விலை கொடுத்து வாங்கப்பட்டுள்ள இந்த ஒப்பந்தம், இந்திய ரியல் எஸ்டேட் வரலாற்றில் மிக விலையுயர்ந்த ஒன்றாகக் கருதப்படுகிறது.
டி.எல்.எஃப் நிறுவனத்தின் இந்தத் திட்டத்தில் 420 அல்ட்ரா-லக்சரி வீடுகள் கட்டப்படுகின்றன, இதில் ஏற்கனவே 65% வீடுகள் விற்றுத் தீர்ந்துவிட்டதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.