
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் டென்னசி மாகாணத்தின் கிளார்க்ஸ்வில்லில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினார்.
அப்போது அவர், அட்லாண்டிக் அல்லது பசிபிக் பெருங்கடலில் ஏதேனும் ஒன்றுக்கு ‘டிரம்ப் பெருங்கடல்’ அல்லது ‘அமெரிக்கக் கண்டங்களின் பெருங்கடல்’ எனப் பெயர் வைக்கலாம் என்று தெரிவித்தார்.
தனது பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்பாக ஒரு பெருங்கடலுக்கும் ஒரு பெரிய ஆற்றுக்கும் புதிய பெயர்களைச் சூட்ட வேண்டும் என்ற விருப்பத்தையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.