
2027-ம் ஆண்டுக்கான மகளிர் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்) கிரிக்கெட் மினி ஏலம் கேரள மாநிலம் கொச்சியில் வரும் 28-ம் தேதி நடைபெற உள்ளது.
இந்த ஏலப் பட்டியலில் மொத்தம் 146 வீராங்கனைகள் இடம்பிடித்துள்ள நிலையில், அணிகளில் உள்ள 27 காலியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.
இந்த 27 இடங்களுக்கு கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.