
வரும் நவம்பர் 8-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், சென்னையில் உள்ள முக்கிய வணிகப் பகுதிகளில் மக்கள் வெள்ளம் காணப்பட்டது.
தியாகராய நகர், புரசைவாக்கம் உள்ளிட்ட பிரதான வர்த்தக மையங்களில் புத்தாடைகள் மற்றும் பலகாரப் பொருட்கள் வாங்குவதற்காக குடும்பத்துடன் மக்கள் குவிந்தனர்.
கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி குற்றச் சம்பவங்கள் நிகழாமல் தடுக்கக் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு தீவிர காவல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.