
மாலத்தீவின் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சரும், 2021-22 காலகட்டத்தில் ஐநா பொதுச் சபையின் தலைவராகப் பணியாற்றியவருமான அப்துல்லா ஷாஹித் சிறுமிக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்ற உத்தரவின் பேரில் திங்கள்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ள அவர் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அவர் 2028-ம் ஆண்டு நடைபெறவுள்ள மாலத்தீவு அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்பும் முக்கிய நபராக உள்ளதால் இந்த கைது நடவடிக்கை மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது.