
கத்தார் நாட்டின் தோகாவில் நடைபெற்று வரும் உலக துப்பாக்கிச்சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில், ஆண்களுக்கான 50மீ பிஸ்டல் அணி பிரிவில் ரவீந்தர் சிங், சவுரப் சவுத்ரி, அமன்ப்ரீத் சிங் அடங்கிய இந்திய அணி தங்கம் வென்றது.
இந்திய அணி மொத்தமாக 1659-24X புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தது; இரண்டாவது இடம் பிடித்த சீனா வெள்ளிப் பதக்கமும், தென் கொரியா வெண்கலப் பதக்கமும் வென்றன.
தனிநபர் 50மீ பிஸ்டல் பிரிவில் இந்திய வீரர் ரவீந்தர் சிங் 559-11X புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கத்தைக் கைப்பற்றி இரண்டு பதக்கங்களை வென்றுள்ளார்.