
துலீப் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி பெங்களூருவில் இருந்து சென்னை எம்.ஏ. சிதம்பரம் மைதானத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.
செப்டம்பர் 6 முதல் 10 வரை நடைபெறும் இந்த இறுதிப் போட்டியை ரசிகர்கள் மைதானத்தில் நேரடியாகக் காணும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
தகுதிச் சுற்றுப் போட்டிகள் திட்டமிட்டபடி ஆகஸ்ட் 23 முதல் பெங்களூருவில் உள்ள சென்டர் ஆஃப் எக்சலன்ஸ் மைதானத்தில் நடைபெறும் என பி.சி.சி.ஐ. செயலாளர் தேவாஜித் சைகியா தெரிவித்துள்ளார்.