
இந்திய கால்பந்து அணி பனாமா, பிரேசில் மற்றும் உருகுவே ஆகிய நாடுகளுடன் மூன்று நட்பு கால்பந்து போட்டிகளில் விளையாட உள்ளது.
வரும் 25-ம் தேதி பெங்களூருவில் பனாமாவுடனும், அக்டோபர் 3-ம் தேதி பிரேசில் மற்றும் அக்டோபர் 6-ம் தேதி உருகுவே அணிகளுடன் கொல்கத்தாவில் இந்தியா மோதுகிறது.
ரியல் மாட்ரிட் வீரர் பெடெரிகோ வால்வெர்டே மற்றும் லிவர்பூர் வீரர் டார்வின் நுனெஸ் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் உருகுவே அணியில் இடம் பெற்றுள்ளனர்.