
சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில், வார்டு மேம்பாட்டு நிதியை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி மேயர் பிரியா மற்றும் திமுக கவுன்சிலர்கள் கருப்பு உடை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழக அரசு கடந்த 4 மாதங்களில் ரூ.21 ஆயிரம் கோடி கடன் பெற்றுள்ள நிலையில், மாநகராட்சி நிதி நிலைமை சீராக இல்லை என துணை மேயர் மு.மகேஷ்குமார் குற்றம் சாட்டினார்.
குடிநீரில் கழிவு கலப்பதாக திமுக உறுப்பினர் ராஜன் புகார் அளித்த நிலையில், அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் கவன ஈர்ப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆணையரிடம் வழங்கப்பட்டது.