
கண்டிகை அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் புகார் எழுந்ததை அடுத்து, தொடர்புடையவர்களை கைது செய்ய வலியுறுத்தி கண்டிகை பேருந்து நிலையத்தில் சிபிஐஎம்எல் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிபிஐஎம்எல் மாவட்டச் செயலாளர் சொ.இரணியப்பன் தலைமை வகித்த இந்த ஆர்ப்பாட்டத்தில், பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்துக்கு நீதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இந்தச் சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாகவும், மாணவிக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாகவும், பள்ளிக்குள் சம்பவம் நடந்ததற்கான ஆதாரம் கிடைக்கவில்லை என்றும் கூறியுள்ளனர்.