
தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதிகளான சூர்யா - ஜோதிகா ஜோடி தங்கள் 20 ஆண்டுகால திருமண வாழ்வைக் கொண்டாடும் விதமாக ஸ்காட்லாந்தில் உள்ள தேவாலயத்தில் மீண்டும் திருமணம் செய்துகொண்டனர்.
இந்த நிகழ்வு தொடர்பான 'தொடர்ச்சி' (The Sequel) என்னும் திருமண உறுதிமொழி புதுப்பித்தல் காணொலியை அவர்கள் சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தனர்.
இந்நிலையில், திருமணத்தை நடத்தித் கொடுத்தவர்கள் மற்றும் நண்பர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நடிகர் சூர்யா இன்று புதிய காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார்.