திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், முப்பெரும் விழா தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், ஒத்திவைக்கப்பட்ட திமுகவின் முப்பெரும் விழா வரும் 19ஆம் தேதி அன்று நடைபெறும் எனத் தலைமைக்கழகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் கலந்துகொண்டு தலைமை தாங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.