
காவிரி நீர் மேலாண்மை ஆணையம் தமிழகத்திற்கு 15 நாட்களுக்கு தினமும் 12,000 கனஅடி நீர் திறக்க உத்தரவிட்டதை கர்நாடக அரசு நிராகரித்துள்ளது.
இந்த உத்தரவு மொத்தம் 16 டி.எம்.சி. நீருக்கு சமமானது என்றும், மாநிலத்தின் நீர் இருப்பு குறைவாக உள்ளதால் இதை நிறைவேற்றுவது கடினம் என்றும் மந்திரி ராமலிங்க ரெட்டி தெரிவித்துள்ளார்.
கர்நாடக அரசு இது குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும், மாநிலத்தின் நலனைப் பாதுகாக்க சுப்ரீம் கோர்ட்டை நாட வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.