
மேற்காசியாவில் நிலவும் பதற்றமான சூழலில், கார்க் தீவு அருகே ஈரான் நாட்டுக்குச் சொந்தமான 5 கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்ற கப்பல்களை அமெரிக்கப் படைகள் தாக்கி அழித்துள்ளன.
அமெரிக்கக் கடற்படைக் கப்பலை இருமுறை பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் தாக்க ஈரான் முயன்றதைத் தொடர்ந்து, தற்காப்பு நடவடிக்கையாக இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்கத் தலைமையகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் இந்தத் தாக்குதலுக்குப் பதிலடியாக, ஜோர்டானில் உள்ள அமெரிக்க இலக்குகளை நோக்கி ஈரான் ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளதால் அப்பகுதியில் போர் பதற்றம் நீடிக்கிறது.