
தமிழக பட்ஜெட்டில் பிரதம மந்திரி சூரிய வீடு திட்டத்தின் கீழ் சோலார் பேனல் பொருத்தும் நுகர்வோருக்கு ரூ. 1 லட்சம் வரை மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தைச் செயல்படுத்த ரூ. 50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதோடு, சென்னை மாநகரில் ஸ்மார்ட் மீட்டர்கள் அமைக்கும் நடைமுறையும் அறிமுகப்படுத்தப்படுகிறது.
அடுத்த 5 ஆண்டுகளில் அரசு-தனியார் கூட்டாண்மை முறையில் 20,000 பொது மின் வாகன சார்ஜிங் நிலையங்கள் அமைக்க ரூ. 50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.