
கேரளாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், 8 மாவட்டங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.
பத்தனம்திட்டா, இடுக்கி, கோட்டயம், எர்ணாகுளம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்தில் மழையளவு 100 மில்லி மீட்டரை கடந்துள்ளது.
ஆலப்புழா, திருச்சூர், பாலக்காடு, மலப்புரம் மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்டும், திருவனந்தபுரம், கொல்லம் மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்டும் விடுக்கப்பட்டு, ஆற்றின் கரையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.