
அமெரிக்காவில் பார்சூன் 500 நிறுவனத்தில் பணியாற்றிய இந்திய AI இன்ஜினியர், தனது பணி இந்தியாவுக்கு மாற்றப்பட்டதால் பணிநீக்கம் செய்யப்பட்டு 60 நாட்களில் நாடு திரும்ப வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.
விசா இருந்தும் வேலை இல்லாத சூழலில் அமெரிக்காவில் தங்குவது கடினம் என்பதால், அவர் மீண்டும் மாஸ்டர் டிகிரி அல்லது பி.எச்டி படிக்கலாமா என ஆலோசனைகளைக் கேட்டு வருகிறார்.
அனுபவம் வாய்ந்த டெக் ஊழியர்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைப்பது சவாலாக மாறியுள்ள நிலையில், அமெரிக்காவில் பட்டம் பெற்ற பலரும் பணிநீக்கத்தால் பாதிக்கப்பட்டு இந்தியா திரும்பும் சூழல் உருவாகியுள்ளது.