
சவுதி அரேபியாவில் ஈரான் கடல் கொள்ளையர்களால் தாக்கப்பட்டதில் தமிழக மீனவர் மாவீரன் உயிரிழந்த விவகாரத்தில், கவன ஈர்ப்பு தீர்மானத்தை விவாதத்திற்கு எடுக்காததால் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
கடந்த 12-ம் தேதி நடந்த இந்தத் தாக்குதலில் மாவீரன் உயிரிழந்ததோடு, மேலும் 3 மீனவர்கள் பலத்த காயங்களுடன் சவுதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலர் பழனிசாமி, வெளிநாடு வாழ் தமிழர்களைப் பாதுகாக்கத் தவறிய அரசு 'ரீல்ஸ்' வெளியிட்டு மக்களை ஏமாற்றுவதாகக் கடுமையாக விமர்சித்துள்ளார்.