
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தால் சில மோசமான விளைவுகள் ஏற்படலாம், ஆனால் அதன் நன்மைகள் மிகப் பெரியதாக இருக்கும் என ஓபன் ஏஐ நிறுவனர் சாம் ஆல்ட்மேன் தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்பத்தின் நன்மைகளைப் பெற சில ஆபத்துகளை ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கும் என்றும், AI-யின் பயன்பாட்டில் மக்களுக்கு சுதந்திரம் முக்கியம் என்றும் அவர் கூறினார்.
AI மூலம் ஏற்படும் பாதிப்புகளை விட, மக்கள் அதைப் பயன்படுத்தி செய்யக்கூடிய நன்மைகள் பல மடங்கு அதிகமாக இருக்கும் என்றும், பேரழிவு ஆபத்துகளை ஏற்றுக்கொள்ளக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.