
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் நடந்த 21-வது தேசிய யூத் தடகள சாம்பியன்ஷிப்பில் தமிழக அணி 2 தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 9 பதக்கங்களை வென்றது.
100 மீட்டர் ஓட்டத்தில் சாம்ராஜ் (10.46 வினாடி) மற்றும் மிர்த்திகா (11.78 வினாடி) தங்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்தனர்.
மூன்று நாட்கள் நடைபெற்ற இந்தத் தொடரில், ஒட்டுமொத்த பதக்கப் பட்டியலில் தமிழக அணி 4-வது இடத்தைப் பிடித்தது.