
சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரின் ஆண்கள் இரட்டையர் இறுதிச்சுற்றில் ஆஸ்திரியாவின் லூகாஸ் மெய்ட்லர்-நீல் ஒபர்லெய்ட்னர் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.
இறுதிப் போட்டியில் ஆஸ்திரிய ஜோடி 6-3, 6-4 என்ற கணக்கில் போர்ச்சுகலின் பிரான்சிஸ்கோ கேப்ரல் - அமெரிக்காவின் ஜேம்ஸ் டிரேசி ஜோடியை எளிதில் வீழ்த்தியது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான இறுதிப்போட்டி இன்று மாலை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.