
திமுக தலைவர் ஸ்டாலினை அவதூறாகப் பேசியதாக, அமைச்சர் நிர்மல்குமார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திமுக எம்பி சிவா டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
வரலாற்று நிகழ்வுகளை கொச்சைப்படுத்தி பொதுமக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் அமைச்சர் செயல்படுவதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆளுங்கட்சியினர் மீது நடவடிக்கை எடுப்பதில் பாரபட்சம் காட்டப்படுவதாகவும் திமுக தரப்பு குற்றம் சாட்டியுள்ளது.