
ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெறும் காமன்வெல்த் போட்டியில், பெண்களுக்கான 48 கிலோ எடைப்பிரிவில் மொத்தம் 190 கிலோ எடையைத் தூக்கி மீராபாய் சானு தங்கப்பதக்கம் வென்றார்.
ஸ்னாட்ச் பிரிவில் 85 கிலோ மற்றும் கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவில் 105 கிலோ என மொத்தம் 190 கிலோ எடையைத் தூக்கி இந்தியாவுக்கு முதல் தங்கப்பதக்கத்தை அவர் பெற்றுத் தந்துள்ளார்.
2018 மற்றும் 2022 காமன்வெல்த் போட்டிகளில் தங்கம் வென்ற மீராபாய் சானு, தற்போது மூன்றாவது முறையாகத் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.