
டென்மார்க் மன்னர் பத்தாம் ஃபிரடெரிக் மற்றும் மேரி அரசியின் மகளான 19 வயது இளவரசி இசபெல்லா, நாட்டின் புதிய கட்டாய ராணுவச் சேவை விதிகளின் கீழ் ராணுவத்தில் இணைந்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பிற்குப் பிறகு ஐரோப்பாவில் பாதுகாப்பு அச்சம் அதிகரித்துள்ளதால், டென்மார்க்கில் பெண்களுக்கு 11 மாதங்கள் கட்டாய ராணுவச் சேவை விரிவுபடுத்தப்பட்டு, இந்த வாரம் 1,600 இளம்பெண்கள் பணியில் சேர்ந்துள்ளனர்.
ராணுவத்தில் சேருபவர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் 9,000 டேனிஷ் குரோனர் ஊதியம் மற்றும் தினப்படியை இளவரசி இசபெல்லா தானாகவே முன்வந்து நிராகரித்துள்ளார்.