
அமெரிக்காவில் திருமணம் முடிந்த சில மணி நேரத்தில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்தில் மணமகன் மற்றும் விமானி உயிரிழந்தனர்.
அட்லாண்டா அருகே நடைபெற்ற திருமண விழாவின் முடிவில் புதுமணத் தம்பதியினர் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.
மோசமான வானிலை காரணமாக ஏற்பட்ட இந்த விபத்தில் படுகாயமடைந்த மணமகள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.