
தென் கொரியாவில் நடைபெற்ற பாரா துப்பாக்கி சுடுதல் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான 10 மீ ஏர் ரைபிள் அணியினர் பிரிவில் இந்திய அணி தங்கம் வென்றது.
அவனி லெஹரா, மோனா அகர்வால், மில்லி ஷா அடங்கிய இந்திய அணி 1878.6 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது.
தனிநபர் பிரிவில் மோனா வெள்ளிப் பதக்கமும், அவனி வெண்கலப் பதக்கமும் வென்றனர். மோனா லாஸ் ஏஞ்சல்ஸ் பாராலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார்.