
இந்தியாவில் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகள் அதிகரித்து வரும் நிலையில், கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் யுபிஐ மூலம் 2,547 கோடி பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன.
இது கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடும்போது 23 சதவீதம் அதிகமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பரிவர்த்தனைகளின் மொத்த மதிப்பு ரூ.31.53 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதுடன், தினசரி சராசரிப் பரிவர்த்தனை மதிப்பு ரூ.1 லட்சம் கோடியைக் கடந்துள்ளது.