
மெக்சிகோவின் சால்டிலோ நகரில் நடைபெற்ற ஹூண்டாய் வில்வித்தை உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவின் தீரஜ் பொம்மதேவரா தங்கம் வென்றார்.
இறுதிப் போட்டியில் ஜப்பானின் நகானிஷி ஜுன்யாவை 6-5 என்ற கணக்கில் அவர் வீழ்த்தினார்.
இதன் மூலம் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய ஆண்கள் ரிகர்வ் வில்வித்தை வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.