
டெல்லி பிரீமியர் லீக் போட்டியில், பேட்ஸ்மேன் லக்சய் தரேஜா அடித்த பந்து கள நடுவர் தர்மேஷ் பரத்வாஜ் முகத்தில் பலமாக தாக்கியது.
படுகாயமடைந்த நடுவர் தர்மேஷ் பரத்வாஜ் அருண் ஜெய்ட்லி மைதானத்தில் இருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இப்போட்டியில் ஈஸ்ட் டெல்லி ரைடர்ஸ் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் நியூ டெல்லி டைகர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.