
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் (தனி) சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு, தொகுதிக்குட்பட்ட பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தங்கு தடையின்றி வாக்களிக்க ஏதுவாக தனியார் நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், வாக்குப்பதிவு நாளை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது.
வாக்குச்சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய காவலர்கள் மற்றும் துணை ராணுவத்தினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு, தீவிர கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.