
பிலிப்பைன்ஸில் உள்ள மிகவும் ஆபத்தான மற்றும் சுறுசுறுப்பான மேயோன் எரிமலை திடீரென வெடித்துச் சிதறியது.
இந்த எரிமலை வெடிப்பு காரணமாக அதன் வாயில் இருந்து வெளியேறிய கரும்புகையும் சாம்பல் துகள்களும் சுமார் 3 கிலோ மீட்டர் உயரத்திற்கு விண்ணில் எழும்பின.
இதனைத் தொடர்ந்து அங்கு எரிமலை எச்சரிக்கை நிலை 3-ஆக உயர்த்தப்பட்டு, பொதுமக்களின் பாதுகாப்புக் கருதி நிவாரண முகாம்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதோடு பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.