
2029 நாடாளுமன்றத் தேர்தலில் விஜய் பிரதமர் வேட்பாளரா என்ற கேள்விக்கு, அதைப் பற்றி பேசுவதற்கான காலம் இதுவல்ல என திருமாவளவன் பதிலளித்துள்ளார்.
தவெக அமைச்சர்கள் வெளிப்படுத்தும் கருத்துக்கள் அவர்களின் தனிப்பட்ட ஆர்வமே தவிர, அது அந்த கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு அல்ல என்று அவர் குறிப்பிட்டார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தவெகவுடன் கூட்டணி அமைப்பது தொடர்பான இரண்டாவது கலந்தாய்வு கூட்டத்தில் வரும் 9-ஆம் தேதி பங்கேற்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.